திங்கள், 12 நவம்பர், 2012

புதன், 12 செப்டம்பர், 2012

தொடரும் கனவு...


கனவிலும் காணாதவன் இன்று அவளோடு கணவனாக வாழ,
கணவனாக வாழ ஆசை பட்ட நான்,
அவளோடு கனவில் வாழ்ந்து வருகின்றேன்.

அனாதை காதலன்



நானோ அவளை கைகுழந்தையாய் உள்ளங்கையில் வைத்து தாங்க,
அவளோ என்னை அனாதையாய் விட்டு சென்றால்...

சனி, 2 ஜூன், 2012

அறுவடை



விதைத்தது பயிராக இருந்திருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்து இருபேன்,
ஆனால் அவள் விதைத்த காதலை எப்படி அறுவடை செய்வதென்றே தெரியவில்லை,
எப்படி அறுவடை செய்தாலும் இறுதியில் அது சில சுவடுகளை விட்டுச்செல்கின்றது,
வாடிய பயிராய் நான் இங்கு, அவளோ இளம் கதிராய் அங்கு..


வியாழன், 31 மே, 2012

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்...
என் வாழ்நாள் காதலிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 4 மே, 2012

வாழ்த்து...

மிகச்சிறந்த நாள் இன்று,
எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொன்ன இந்த உலகம்,
அவளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள இன்றுமுதல் ஒருவன்,
என்னிடம் இருந்து தட்டிப்பரித்தான? இல்லை நான் கைநழுவ விட்டேனா?
கடவுள் தண்டித்தது என்னையா, இல்லை அவளையா???
விடை தெரியாமல் விடை கொடுத்தேன்.
அவளுக்கு என் இதயம் கணிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ...