Tuesday, December 14, 2010

முத்தம்
தானாக தர வேண்டியதை,
தண்டனையாக கேட்டு வாங்கினேன்.

சிரிப்பு


அவளை பார்க்க சென்ற போது:
வெறும் கைகளால் வரவேற்றாள்,
சிரிப்பு என்னும் வாடா மலர் கொண்டு.

Monday, December 13, 2010

வா நிலைமழை - வேலை கிடைத்த சந்தோசம்.
வெயில் - அவளை விட்டு பிரியும் வருத்தம்.
இரண்டுக்கும் இடையில்,
தெரியும் வானவில் எங்கள் காதல்....

Monday, November 29, 2010

கருவறை
அவள் கருவறை என்ற இருட்டறையில் எனக்கு உயிர் கொடுத்தால்,
இவள் மனம் என்னும் இருட்டறையில் என் உயிரை பறித்தால்........

Wednesday, November 17, 2010

கத்தறி

மற்றவர் காதலை சேர்த்து வைக்க சொன்னவள்,
எங்கள் காதலை வெட்டி விட சொன்னாள்.
இதை யாரிடம் நான் சொல்ல !?!?!?

காதல்

 
 
 
 
கண்களில் காதல் எட்டி பார்த்ததே
அவளை பார்த்த பிறகு தான்...

Tuesday, November 16, 2010

அவள் கைகளில்

அவள் கை பிடித்து கணவனாவதை விட,
அவள் கையில் குழந்தையாக இருக்க ஆசை,
ஏனென்றால்,
கணவனாக இருந்தால் நான் அவளை சுமந்திருக்கவேண்டும்,
குழந்தையாக இருப்பதால் அவள் என்னை சுமக்கின்றால்....

Sunday, November 14, 2010

அனாதை
அவள் அரவணைப்பால் என்று தெரிந்திருந்தாள்,
அனாதையாக பிறந்திருப்பேன்...

பூந்தோட்டம்


வாழ்கை ஒரு பூந்தோட்டம், 
பூவை சுற்றி வரும் தேனீ நான்,
அலைவது பூவிற்காக அல்ல அதில் உள்ள தேனிற்காக.

அதை போல,
நான் சுற்றுவது அவளிற்காக அல்ல,
அவள் மேல் உள்ள காதலிற்காக... 

 மனம் பேசும் வார்த்தைகளுடன் தேனீ...

Saturday, November 13, 2010

கற்பனை

அவள் விரலோடு விரல் சேர்த்து,
அவள் மனதில் தலை வைத்து தூங்கி,
அவள் கன்னக்குழியில் பலமுறை விழுந்து,
அவள் சிரிப்பில் செத்து மடிந்து,
அவள் தோள் சாய்ந்து,
அவள் உள்ளம் தொட்டு,
என் வாழ்வை அவளோடு வாழ அசை....
இது அனைத்தும் ஒரு கற்பனை.

>> என் கற்பனை வாழ்வின் கதாநாயகி அவள் <<
மனம் பேசும் வார்த்தைகளுடன் நான்.....

3 ???


கடவுளிடம் : ஏன்டா அவள என் கண்ல காட்னா.
அவளிடம்  : நீ ஏன்டி என் முன்னாடி வந்த.
என்னிடம்  : நீ ஏன்டா அவள பாத்த.

இதில் ஏதாவது ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நான் கவிஞன் ஆகி இருக்க மாட்டேன்!!!

Friday, November 12, 2010

மழை


மேகமாய் மாறி நான் பொழிந்த காதல் மழையில்,
கரைந்தது   : நான் கட்டிய மணல் கோட்டை.
கரையாதது : அவள் இதயம் என்னும் இரும்பு கோட்டை.


மனம் பேசும் வார்த்தைகளுடன் நான்.....

Thursday, November 11, 2010

புரிஞ்சுக்கடிஎன்னை புரிந்துகொள்ள தவறியவள்,
என்னை பற்றி தவறாக புரிந்துகொண்டாள்.
அவளிடம் நான் கேட்டது காதலை அல்ல வாழ்க்கையை...

Tuesday, November 9, 2010

பாசம்


அவள் என் அன்னையைப்போல,
இறுதியில் வைத்தது பாசம் என்றுவிட்டால்!!!

மழைக்காளான்

காதல் ஒரு மழைக்காளான்,
குப்பையில் இருந்தாலும் அழகாய் இருக்கும்,
இன்று அவளுக்கு குப்பையாய் தோன்றும் என் காதல்,
என்றாவது ஒரு நாள் அழகாய் தெரியும்...

Tuesday, November 2, 2010

தூரம்நான் இருக்கும் தூரம் தெரியாமல் வருந்துகின்றாள்,
தலை குனிய தெரியாதவள், மனதில் தான் இருகின்றேன் என்று தெரியாமல்.
Image courtesy: Taken from National Geographic photos.

Sunday, October 31, 2010

ஈரம்இதயத்தில் ஈரம் இல்லாதவள்....
காத்திருந்த நாளில் என் காதலை புரிந்துகொள்ளாதவள்,
இன்று என் கல்லறையில் கண்ணீர் வடிகின்றால்.

காதல் கடிதம்

 


நான் அனுப்பிய காதல் கடிதம்,
அவளுக்கு கிடைத்தது மணநாள் பரிசாக...

தூண்டில்

அவள் விழியால் போட்ட தூண்டிலில்,
மாட்டி துடிப்பது என்னவோ என் இதயம்,
வலிக்குதடி என் இதயம்,
சற்று கண்ணுறங்கு...

Thursday, October 28, 2010

சூதாட்டம்அழகாய் அடுக்கி,
திறமையாய் விளையாண்டு,
சாமர்த்தியமாய் கலைத்து சென்றால்,
காதல் ஒரு சூதாட்டம்... 

Monday, October 25, 2010

வேண்டுதல்

உனக்கு காதலனாகத்தான் இல்லை,
உனக்கு கணவனாகும் தகுதியும் இல்லை,
உனக்கு குழந்தையாகவாவது பிறக்கமாட்டேனா????

சோகம்


என் காதலை மறுத்ததால்,
இந்த மலரே கருகியது,
அப்போ என் இதயத்தின் நிலை????.....

மாறுதல்

அன்று தோளில் சாய்ந்தவள்,
இன்று தோழன் என்கின்றாள்!!!!!!!!

Saturday, October 23, 2010

love


Love its a single word but describes a lot... 
this video make us to feel what is love...


அதுவா நடந்துச்சு,
என்ன போட்டு தாகுச்சு,
தலை கீழ போட்டு திறுபுச்சு,
அவள பார்த்த போது...

சிறந்த வரி: அவளுக்கு அவங்க அப்பா நா ரொம்ப புடிக்கும்...

குழந்தை


அவள் ஒரு குழந்தை,
அதனால் தானோ என் காதலில் விளையாடுகின்றாள்..

என் காதல்அவள் : அப்பா சொல்லணும் கார்த்திக்...
 நான்  : பட் அவ நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

Wednesday, October 20, 2010

நீயும் நானும்


ஒட்டாமல் இருப்பது 
தண்ணீர் மட்டும் அல்ல;
நீயும் நானும் தான்....

Tuesday, October 19, 2010

காதல்

நானோ என் காதலை வெளிபடுத்த,
அவளோ தன் காதலை மூடி மறைகின்றால் ....

மறுபக்கம்
என்னை ஒரு பக்கம் பார்த்து வெறுத்தவள்,
மறுபக்கத்தை பார்க்க மறந்துவிட்டால்.....

பைத்தியம்

 
அறிவாளியாய் பிறந்தவன், அவளை 
பார்த்ததும் பைத்தியம் ஆனேன்!!!!!

Sunday, October 17, 2010

சுவடுகள்நீ வந்து சென்ற சுவடுகளே மறையாத நிலையில்,  உன்னை மறப்பது எப்படி யடி....

தேவதை

Orkut Scraps - Angelஉன்னை நான் இரவில் தான் 
கண்டு [காதல்] கொண்டேன்....

Wednesday, October 13, 2010

அடிஅன்று கன்னத்தில் அடித்தவள்,
இன்று இதயத்தில் அடிகின்றால்...

Sunday, October 10, 2010

இறகைப் போலே


கிடப்பது என் அஸ்தி மீது என்று தெரியாமல்,
மென்மையான காதலை வெளிப்படுத்துகின்றாள்...

Friday, October 8, 2010

மௌனம்
வார்த்தைகள் நிறைந்த எங்கள் பேச்சில்,
இன்று மௌனம் நிறைந்திருகின்றது...

Thursday, October 7, 2010

புரியாத புதிர்

அவள் மணநாள் 
என் நினைவு நாளாக இருக்கும்....


எதை சொன்னாலும் ஏற்றுகொள்ளாத அவளுக்கு எப்படி என் அன்பை புரியவைப்பது என்று சத்தியமா தெரியல....

 

சூழ்நிலை

என் நிலைமையை இப் படம் பிரதிபலிகின்றது........

ஆசை

உடைப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்,
அதனால் தான் என் இதயத்தை தினம் உடைகின்றால்!!!

Wednesday, October 6, 2010

முடிவுஅழுவதற்கு கண்ணில் ஈரம் இல்லை,
வருத்தப்பட்டு எழுத வார்த்தை இல்லை,
உன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை,
என்னையே உனக்கு சமர்பிக்கின்றேன்,
ஏற்றுவதும் தூற்றுவதும் உன் கையில்,
உன் முடிவிற்காக காத்திருந்த எனக்கு கிடைத்த பரிசு Im sorry.

நான்


என்னை பற்றி தெரிந்தவர்கள் எல்லாம் என்னை தூக்கி ஏறிய,
என்னை பற்றி தெரியாதவ
ர்கள் என்னை விரும்புகின்றனர்,தெரிந்தவர்களுக்காக இறப்பதா?
தெரியதவர்களுக்காக வாழ்வதா?

என்னை விரும்பத்தான் ஆள் இல்லை,
என் எழுத்தை விரும்பவாவது ஒருவன் இருகின்றான் என்று பெருமை படுகின்றேன்...


என் மனதில் தோன்றும் சிந்தனைகளுடன், 
            விஸ்வநாதன்

This is dedicated to my fan MAKAVETIS as a tribute who loves my blog.

Tuesday, October 5, 2010

வாழ்த்துஅவளைப்பற்றி வாழ்த்தி பேசிய வாயால்,
இன்று திருமண நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வைத்து விட்டால்...

அரளி
அன்று அரளிப்பூவை போல அழகாய் தோன்றியவள்,
இன்று அப்பூவை போல் விசமாய் மாறிவிட்டால்...

அவள்
அவள் ஒரு புத்திசாலி, அதனால் தானோ என்னை காதலிக்க வில்லை...

Friday, September 24, 2010

ஒளி

நீ ஒளி ஏற்றியது விளக்கிற்கு அல்ல
என் வாழ்கைக்கு !!!!!!

கண்ணீர்

உன்னை பற்றி எழுதிய கை இன்று கண்ணீர் விடுகின்றது........
காரணம் சொல்ல தெரியாமல் ???

உண்மை
நான் பொய் சொன்ன போது என்னை விரும்பிய அவள்,
இன்று அவளை விரும்புகின்றேன் என்று உண்மையை சொன்னதும் என்னை வேருக்கின்றால்....


                     
                   ஏமாற்றத்தில்....                                                   விஸ்வநாதன்