செவ்வாய், 30 நவம்பர், 2010
திங்கள், 29 நவம்பர், 2010
கருவறை
அவள் கருவறை என்ற இருட்டறையில் எனக்கு உயிர் கொடுத்தால்,
இவள் மனம் என்னும் இருட்டறையில் என் உயிரை பறித்தால்........
புதன், 17 நவம்பர், 2010
செவ்வாய், 16 நவம்பர், 2010
அவள் கைகளில்
அவள் கை பிடித்து கணவனாவதை விட,
அவள் கையில் குழந்தையாக இருக்க ஆசை,
ஏனென்றால்,
கணவனாக இருந்தால் நான் அவளை சுமந்திருக்கவேண்டும்,
குழந்தையாக இருப்பதால் அவள் என்னை சுமக்கின்றால்....
ஞாயிறு, 14 நவம்பர், 2010
பூந்தோட்டம்
சனி, 13 நவம்பர், 2010
கற்பனை
அவள் விரலோடு விரல் சேர்த்து,
அவள் மனதில் தலை வைத்து தூங்கி,
அவள் கன்னக்குழியில் பலமுறை விழுந்து,
அவள் சிரிப்பில் செத்து மடிந்து,
அவள் தோள் சாய்ந்து,
அவள் உள்ளம் தொட்டு,
என் வாழ்வை அவளோடு வாழ அசை....
இது அனைத்தும் ஒரு கற்பனை.
>> என் கற்பனை வாழ்வின் கதாநாயகி அவள் <<
3 ???
கடவுளிடம் : ஏன்டா அவள என் கண்ல காட்னா.
அவளிடம் : நீ ஏன்டி என் முன்னாடி வந்த.
என்னிடம் : நீ ஏன்டா அவள பாத்த.
இதில் ஏதாவது ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நான் கவிஞன் ஆகி இருக்க மாட்டேன்!!!
வெள்ளி, 12 நவம்பர், 2010
மழை
மேகமாய் மாறி நான் பொழிந்த காதல் மழையில்,
கரைந்தது : நான் கட்டிய மணல் கோட்டை.
கரையாதது : அவள் இதயம் என்னும் இரும்பு கோட்டை.
மனம் பேசும் வார்த்தைகளுடன் நான்.....
வியாழன், 11 நவம்பர், 2010
புரிஞ்சுக்கடி
என்னை புரிந்துகொள்ள தவறியவள்,
என்னை பற்றி தவறாக புரிந்துகொண்டாள்.
அவளிடம் நான் கேட்டது காதலை அல்ல வாழ்க்கையை...
செவ்வாய், 9 நவம்பர், 2010
மழைக்காளான்
காதல் ஒரு மழைக்காளான்,
குப்பையில் இருந்தாலும் அழகாய் இருக்கும்,
இன்று அவளுக்கு குப்பையாய் தோன்றும் என் காதல்,
என்றாவது ஒரு நாள் அழகாய் தெரியும்...
செவ்வாய், 2 நவம்பர், 2010
தூரம்
நான் இருக்கும் தூரம் தெரியாமல் வருந்துகின்றாள்,
தலை குனிய தெரியாதவள், மனதில் தான் இருகின்றேன் என்று தெரியாமல்.
Image courtesy: Taken from National Geographic photos.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















